Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேரர்களைத் தொடர்ந்து இந்துக் குருக்கள், மௌலவிமார்கள் மீதும் நடவடிக்கையா?- “பாதள பிக்குகளை உருவாக்கியது இந்த ஜேவிபியே”; சம்பிக்க ரணவக்க

தேரர்களைத் தொடர்ந்து இந்துக் குருக்கள், மௌலவிமார்கள் மீதும் நடவடிக்கையா?- “பாதள பிக்குகளை உருவாக்கியது இந்த ஜேவிபியே”; சம்பிக்க ரணவக்க

47 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பௌத்த தேரர்கள் மீது நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அரசாங்கம், அடுத்தகட்டமாக இந்துக் கோவில்களில் பணியாற்றும் குருக்கள் மற்றும் பள்ளிவாசல்களில் உள்ள மௌலவிமார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முற்படலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கம் முதற்கட்டமாக பௌத்த தேரர்களின் காவி உடையை அகற்றி, அவர்களை அடிபணிய வைக்கத் திட்டமிட்டு வருவதாகவும், இதற்கு நாட்டின் தேரர்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், மதத் தலைவர்களின் உரிமைகள் மற்றும் மத நிறுவனங்களின் சுதந்திரம் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை, பிக்குகள் பின்பற்ற வேண்டிய அடிப்படை ஒழுக்க நெறிகளை மீறிச் செயற்படும் சில தேரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் தமக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

பிக்குகளுக்கான ஒழுக்க விதிமுறைகள் மற்றும் நாட்டின் பொதுச் சட்டங்கள் மீறப்படும் சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தவறில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் ‘பாதாள பிக்குகள்’ அமைப்பை உருவாக்கிய முதலாவது அரசியல் கட்சி மக்கள் விடுதலை முன்னணி (JVP) எனவும் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மதத் தலைவர்களை இலக்குவைப்பதாக மாறக்கூடும் என்ற தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், பௌத்த தேரர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஏனைய மதங்களின் மதகுருமார்களையும் பாதிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு; இன்டர்போல் சிவப்பு அறிவிப்பைப் பெறவும் ஆணை!
செய்திகள்

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு; இன்டர்போல் சிவப்பு அறிவிப்பைப் பெறவும் ஆணை!

October 14, 2026
ஞானசார தேரர் சிறைவாசம் அனுபவிப்பதற்கு சந்தியா ஏக்னலிகொட மீது பழி போடும் பிரசாரங்கள்; ஆறு ஊடக அமைப்புகள் கண்டனம்!
செய்திகள்

ஞானசார தேரர் சிறைவாசம் அனுபவிப்பதற்கு சந்தியா ஏக்னலிகொட மீது பழி போடும் பிரசாரங்கள்; ஆறு ஊடக அமைப்புகள் கண்டனம்!

October 14, 2026
உம்ரா யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை; விமானச் சேவைகளில் இடையூறு ஏற்படலாம்!
செய்திகள்

உம்ரா யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை; விமானச் சேவைகளில் இடையூறு ஏற்படலாம்!

October 14, 2026
இலங்கைப் பிரஜை அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து; சவூதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

இலங்கைப் பிரஜை அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து; சவூதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

October 14, 2026
ஞானசார தேரர் விவகாரம்; உதய கம்மன்பிலவின் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் விசாரணை!
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரம்; உதய கம்மன்பிலவின் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் விசாரணை!

October 14, 2026
மூன்றாவது டி; 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!
செய்திகள்

மூன்றாவது டி; 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!

October 14, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு