இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையிலான பாதுகாப்பற்ற உடலுறவு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு பெண் எச்.ஐ.வி. தொற்றாளராக அடையாளம் காணப்படும்போது, ஏழு ஆண்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படும் போக்கு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (14) சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஊசி மூலம் போதைப்பொருட்களைச் செலுத்துவதாலும் எச்.ஐ.வி. தொற்று ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.







