சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது.
இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சேனக்க பல்லேதென்ன, இது தொடர்பாக தமக்கு எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், சிறைச்சாலை விதிமுறைகளின்படி இவ்வாறான சம்பவம் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.







