Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் காவி உடை அணிய முழுமையான அனுமதி!

சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் காவி உடை அணிய முழுமையான அனுமதி!

58 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் காவி உடையை அணிவதற்கு முழுமையான அனுமதி வழங்கும் வகையில், சிறைச்சாலைகளின் நிரந்தரக் கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழுள்ள விதிமுறைகள் மற்றும் நிரந்தரக் கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் இந்தத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

பௌத்த பிக்குகள் சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அகற்றுவது மற்றும் சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அணிவது தொடர்பான விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டபோது ஏற்பட்ட நிலைமைகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி தலைமையில் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, சிறைச்சாலைகளின் விதிமுறைகள் மற்றும் நிரந்தரக் கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காகக் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, சிறைச்சாலைகளின் நிரந்தரக் கட்டளை இலக்கம் 356 இல் திருத்தம் செய்து, 356(அ) என்ற புதிய பிரிவைச் சேர்ப்பதற்கும், திணைக்களக் கட்டளை இலக்கம் 550 இல் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி, பௌத்த பிக்கு ஒருவர் கைதியாகச் சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பத்தில், அவர் அணிந்திருக்கும் காவி உடையை அகற்றுவது தொடர்பாகப் பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு அறிவித்து, அதற்கமைய நடவடிக்கை எடுப்பதற்காகச் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

மேலும், ஏனைய மதங்களைச் சேர்ந்த மதகுருமார்கள் சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பங்களிலும், அந்தந்த மதங்களுக்கு ஏற்ற வகையில் இவ்விதிமுறைகளை மாற்றியமைத்துப் பயன்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பௌத்த பிக்குகள் ஏதேனும் காரணத்திற்காகச் சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அணிவதற்கு முழுமையான அனுமதி வழங்கும் வகையில் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பௌத்த பீடம் அல்லது வேறு பௌத்த பீடங்களிடமிருந்து அதற்கு எதிரான அறிவிப்பு கிடைக்கும் வரை இந்த அனுமதி நடைமுறையில் இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருத்தங்களின் அடிப்படையில், நடைமுறையிலுள்ள நிரந்தரக் கட்டளைகளை மாற்றியமைக்குமாறு பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை
செய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை

October 14, 2026
பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!

October 14, 2026
ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதா? – சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதா? – சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு!

October 14, 2026
சிவராசா அனோஜன் பாதுகாப்பாக நாடு திரும்பும் வரை முயற்சிகள் தொடரும்; சாணக்கியன்
செய்திகள்

சிவராசா அனோஜன் பாதுகாப்பாக நாடு திரும்பும் வரை முயற்சிகள் தொடரும்; சாணக்கியன்

October 14, 2026
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்க பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம்!
செய்திகள்

இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்க பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம்!

October 14, 2026
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 இந்திய மீனவர்கள் விடுதலை!
செய்திகள்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 இந்திய மீனவர்கள் விடுதலை!

October 14, 2026
Next Post
சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு