கண்டி நகரில் புதிய மெட்ரோ பேருந்து (Metro Bus) சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பாகப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கருத்துத் தெரிவித்துள்ளார்.
முறையான மற்றும் தெளிவான திட்டமிடலின் அடிப்படையிலேயே இந்தப் பேருந்து சேவை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாநகரப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், பயணிகள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் பயணிப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய மெட்ரோ பேருந்து சேவையின் ஊடாக நகர்ப்புறப் போக்குவரத்தை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








