சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க போன்றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஞானசார தேரருக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்க முடியாது என அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஞானசார தேரருக்கு ஆதரவாக பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் இந்த நாட்டுக்காகவும் சிங்கள மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர் எனக் குறிப்பிட்ட அம்பிட்டியே சுமணரத்ன தேரர், அவ்வாறு குரல் கொடுத்ததன் விளைவாகவே முன்னர் ஆட்சியிலிருந்த ஜனாதிபதியினால் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
எனினும், அந்தப் பொதுமன்னிப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, ஞானசார தேரர் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், பின்னர் பொதுமன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இறுதியாக ஞானசார தேரரின் காவி உடையும் களையப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவ்விடயம் தொடர்பில் தனது கேள்விகளையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.







