Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி

இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி

53 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில், மாடு ஒன்றைக் கடத்திச் செல்லும் முயற்சி நேற்று (14) இரவு தோல்வியடைந்துள்ளது.

மாட்டை இறைச்சிக்காகக் கடத்திச் செல்லும் நோக்கில் அதன் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி, வயிற்றுப் பகுதியில் மரக்கட்டை ஒன்றைச் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடுமையாகக் காயமடைந்த மாடு, பின்னர் அங்கேயே கைவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ரயில்வே ஊழியர்களும் அப்பகுதி மக்களும் ஒன்றிணைந்து, காயமடைந்த மாட்டுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தற்காலிகக் கொட்டகை ஒன்றை அமைத்துள்ளனர். அங்கு சென்ற தியத்தலாவை கால்நடை வைத்தியர், மாட்டுக்குச் சிகிச்சை அளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தியத்தலாவை நகரப் பகுதியில் சுதந்திரமாக நடமாடும் மாடுகள் இறைச்சிக்காகத் தொடர்ச்சியாகக் கடத்தப்படுவதாகப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்வாறான சட்டவிரோத விலங்குக் கடத்தல் நடவடிக்கைகளில் சில முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்காகத் தியத்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கால்நடைகளுக்கு எதிரான இத்தகைய கொடூரச் செயல்களைத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!

October 15, 2026
மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்
செய்திகள்

மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்

October 15, 2026
சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்
செய்திகள்

சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்

October 15, 2026
கண்டி நகரில் புதிய மெட்ரோ பேருந்து சேவை!
செய்திகள்

கண்டி நகரில் புதிய மெட்ரோ பேருந்து சேவை!

October 15, 2026
யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய போது அடிப்படை சம்பளம் 51 இலட்சம்
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய போது அடிப்படை சம்பளம் 51 இலட்சம்

October 15, 2026
குருக்கள்மடம் அகழ்வு பகுதியில் மனித எலும்புத் தொகுதி மீட்பு
செய்திகள்

குருக்கள்மடம் அகழ்வு பகுதியில் மனித எலும்புத் தொகுதி மீட்பு

October 15, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு