Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்

56 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்து கொண்டிருந்த சிங்கப்பூர் கொடியைக் கொண்ட ‘GFS Pride’ என்ற கப்பல், கடற்கண்ணி வெடியில் சிக்கி மூழ்கியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பலில் பயணம் செய்த 21 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதோடு உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கப்பலில் 2500க்கும் அதிகமான கொள்கலன்கள் இருந்தன. ஈரான் போருக்கு மத்தியில்,ஹோர்முஸ் நீரிணையில் கடற்கண்ணிவெடியில் (Sea Mine) சிக்கியதில் 2,500 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற வர்த்தகக் கப்பல் ஒன்றே இவ்வாறு மூழ்கியுள்ளது.

இந்தக் கப்பல் ஆபத்தான மற்றும் அனுமதியற்ற பாதையில் சென்றதாலேயே கண்ணி வெடியில் சிக்கியதாக ஈரான் புரட்சிகர காவல்படை (Iran’s Revolutionary Guards) தெரிவித்துள்ளது.

இதேவேளை, விபத்துக்குள்ளான கப்பலில் உள்ள கொள்கலன்கள் கடலில் மிதந்து வருவதால், ஏனைய கப்பல்களுக்கும் கடல்வழிப் போக்குவரத்திற்கும் ஆபத்து ஏற்படக்கூடும்.

இதனால் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் உள்ளூர் கப்பல்களும் கடற்றொழிலாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஈரான் அறிவுறுத்தியுள்ளது.

வணிகக் கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு முரணானவை என சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி
செய்திகள்

இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி

October 15, 2026
கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!

October 15, 2026
மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்
செய்திகள்

மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்

October 15, 2026
சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்
செய்திகள்

சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்

October 15, 2026
கண்டி நகரில் புதிய மெட்ரோ பேருந்து சேவை!
செய்திகள்

கண்டி நகரில் புதிய மெட்ரோ பேருந்து சேவை!

October 15, 2026
யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய போது அடிப்படை சம்பளம் 51 இலட்சம்
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய போது அடிப்படை சம்பளம் 51 இலட்சம்

October 15, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு