ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஊடாக 2025 மார்ச் முதல் 2026 செப்டம்பர் வரை மொத்தம் 167,569 புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) தெரிவித்துள்ளது.
இதில், 2025 மார்ச் முதல் டிசம்பர் வரை 86,389 வாகனங்களும், 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 81,180 வாகனங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
வாகன இறக்குமதியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், நீண்டகாலமாகத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கான தாமதக் கட்டணத் தள்ளுபடிகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வளைகுடா பிராந்தியத்தின் ஊடான வாகன மறு ஏற்றுமதியில் ஏற்பட்ட தடங்கல்களைக் கருத்திற்கொண்டு, சேமிப்புக் கட்டணங்களைக் கட்டுப்படுத்தும் சிறப்புத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகளை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) பாராட்டியுள்ளது.







