Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 316 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்!

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 316 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்!

1 hour ago
in செய்திகள்

ஜனாதிபதி நிதியத்தின் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, ரஜரட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 316 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில், கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி நடத்தப்பட்ட கண் பரிசோதனைகளின் மூலம் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படுவதாக அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கு அவை வழங்கப்பட்டன.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, எதிர்காலத்தில் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்த ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு பிரித்தானியாவின் Stroud Rotary Club மற்றும் Wish மன்றம் ஆகியன பங்களிப்பு வழங்குகின்றன.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை உறுப்பினரும் பேராசிரியருமான ஜே.ஆர்.பி. ஜயகொடி, ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தற்போது பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். இதன் மூலம் பயனாளிகள் இலகுவாக சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், சில மாகாணங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் முதற்கட்டத்திற்கு ரஜரட்ட பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டமைக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பந்துல ஜயதிலக நன்றி தெரிவித்தார். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே உள்ளிட்ட ஜனாதிபதி நிதிய அதிகாரிகள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டம் கைவிடப்பட்டது!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டம் கைவிடப்பட்டது!

October 19, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் நிதி மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் நிதி மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

October 19, 2026
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நாட்டில் இனவாதம் தலைதூக்கும்; ஸ்ரீநேசன்
செய்திகள்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நாட்டில் இனவாதம் தலைதூக்கும்; ஸ்ரீநேசன்

October 19, 2026
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல்
செய்திகள்

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல்

October 19, 2026
கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கைது!
செய்திகள்

கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கைது!

October 19, 2026
விடுதலை புலிகளின் 110 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் பசிலால் கொள்ளை?; ஆதாரங்களை உடைக்கும் பொன்சேகா
செய்திகள்

விடுதலை புலிகளின் 110 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் பசிலால் கொள்ளை?; ஆதாரங்களை உடைக்கும் பொன்சேகா

October 19, 2026
Next Post
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நாட்டில் இனவாதம் தலைதூக்கும்; ஸ்ரீநேசன்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நாட்டில் இனவாதம் தலைதூக்கும்; ஸ்ரீநேசன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு