இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்ட திரைப்படமொன்றைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விளம்பரத் துறையில் அனுபவமுள்ள முன்னணி இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில், அதிக பொருட்செலவிலும் நவீன தொழில்நுட்பங்களுடனும் இந்தத் திரைப்படம் உருவாகவுள்ளதாகவும், படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர் யார் என்பது இதுவரை இறுதிசெய்யப்படவில்லை. முக்கிய கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகைகளைத் தெரிவுசெய்யும் பணிகள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இத்திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.







