வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 11 வெளிநாட்டுத்தபால் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையொன்றின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
67.53 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையினை இலங்கைச் சுங்கப் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு
இதன்போது தாய்லாந்து, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்தே இந்தப் பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலதிகமாக, பெல்ஜியம், பிரான்ஸ், கனடா மற்றும் ஜேர்மனியிலிருந்து அனுப்பப்பட்ட பொதிகளில் இருந்து 2,395 கிராம் MDMA மாத்திரைகளும், நெதர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதியொன்றில் இருந்து மெண்டி (Mandy) போதைப்பொருள் 33 கிராம்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உரிய முகவரிகளின் உரிமையாளர்கள் வந்து அதைப் பெற்றுக்கொள்ளும் வரை அவற்றை தடுத்து வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு யாரும் வராத காரணத்தினால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் முன்னிலையில் அவற்றைத் திறந்து பரிசோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனையடுத்து மத்திய தபால் பரிமாற்றகத்தில் ஆரம்பக் கட்டப் பரிசோதனைகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்கும் நீதிமன்ற ஊடாகச் சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் பொறுப்பில் எடுக்கப்பட்ட போதைப்பொருட்களை இலங்கைச் சுங்க அதிகாரிகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.








