ஹரிஸ்பட்டுவ, பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (21) காலை 9 மணி முதல் 23ஆம் திகதி பிற்பகல் 3 மணி வரை நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதனால் மெதவெல, கல்லெனவத்த, கலகெதர, மாவத்தகம உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்படும்.
குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் சபை கேட்டுக்கொண்டுள்ளது.







