இலங்கையின் மின்சாரத் தேவையைச் சமநிலைப்படுத்தும் நோக்கில், இன்று (21) நாட்டின் நான்கு வலயங்களிலும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில், ஒவ்வொரு வலயத்திலும் தலா ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு தனியார் நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட மின்வெட்டுத் திட்டத்திற்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த 19ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.
இதேவேளை, அதிகாரப்பூர்வமாக ஒரு மணி நேர மின்வெட்டு என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் சில பகுதிகளில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மின்சார நுகர்வோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல தெரிவித்துள்ளார்.







