Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி

இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி

48 minutes ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

இறக்காமம் பிரதேசத்தின் நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் அக்கரைப்பற்று நீதிமன்றத்துடன் இணைப்பது அல்லது அப்பிரதேசத்திற்கெனத் தனியான சுற்றுலா நீதிமன்றத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை இன்று (21) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார்.

பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு வேளையின்போது, நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிடம் இது தொடர்பான விளக்கத்தை அவர் கோரவுள்ளார்.

12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சுமார் 18,000 மக்களையும் கொண்ட இறக்காமம் பிரதேசத்தில், 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் தமிழ் பேசும் மக்களாவர். இந்நிலையில், எவ்வித முன்னறிவித்தலுமின்றி இறக்காமம் நீதிமன்ற நடவடிக்கைகள் சிங்கள மொழி பயன்பாட்டிலுள்ள அம்பாறை நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாக்குமூலங்கள் மற்றும் ஏனைய சட்ட ஆவணங்களை மொழிபெயர்ப்பதற்காக மேலதிக பணத்தையும் நேரத்தையும் செலவிட வேண்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, இறக்காமம் நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் அக்கரைப்பற்று நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் அல்லது இறக்காமம் பிரதேசத்திற்கெனத் தனியான சுற்றுலா நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, நீதியமைச்சின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2025 ஜூன் 17ஆம் திகதி நடைபெற்ற நீதியமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு வருடத்திற்கும் மேலாகியும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இறக்காமத்தில் சுற்றுலா நீதிமன்றம் இயங்கி வருவதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் இசுரு தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறானதொரு நீதிமன்றம் இதுவரை அமைக்கப்படவில்லை என இறக்காமம் பிரதேச செயலாளரும் பிரதேச சபைத் தவிசாளரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான சூழலில், இறக்காமம் மக்களின் நீதித்துறை சார்ந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி உதுமாலெப்பை எம்.பி. இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!
செய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!

October 21, 2026
அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு
செய்திகள்

அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு

October 21, 2026
தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!
செய்திகள்

தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!

October 21, 2026
பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
செய்திகள்

பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

October 21, 2026
படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்
செய்திகள்

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்

October 21, 2026
100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; கம்பஹா போக்குவரத்து அதிகாரி கைது!
செய்திகள்

100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; கம்பஹா போக்குவரத்து அதிகாரி கைது!

October 21, 2026
Next Post
அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு

அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு