வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா, ஆலய குரு அருட்பணி கலாநிதி கே.எஸ். நிஷாந்தன் தலைமையில் கடந்த (18) ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் முதலில் நன்றி செலுத்தும் வழிபாடு இடம்பெற்றதுடன், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், கன்னகிபுரம் மற்றும் விநாயகபுரம் கிராம சேவையாளர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், ஓய்வுபெற்ற திருப்பணியாளர் ஒருவரும் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் வாழைச்சேனை சேகரத்தைச் சேர்ந்த திருப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.














