நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுர ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கை இன்று (22) இரவு 10 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுர மாவட்டங்களின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் உடபாலத்த, மெததும்பற மற்றும் குண்டசாலை பகுதிகளிலும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதியிலும், இரத்தினபுர மாவட்டத்தின் இரத்தினபுர, எலப்பத்த மற்றும் குருவிட்ட பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் வாகன சாரதிகளும் மண்சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் உள்ளிட்ட இயற்கை அனர்த்த அபாயங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அனர்த்த அபாய அறிகுறிகள் தென்படும் சந்தர்ப்பங்களில் தாமதமின்றி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








