கலபொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, மகா சங்கத்தினரின் பங்கேற்புடன் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று (21) இரவு குறித்த மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவர் தொடர்பில் அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த நபரைச் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, அவரிடமிருந்து சிறிய அளவிலான இரண்டு கத்திகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக குருந்துவத்தை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.








