ஹோமாகம, வேகந்த மாவத்தையில் உள்ள மின்மாற்றி ஒன்றில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், மின்மாற்றியில் ஏறிய நபர் அதிலிருந்த செப்புக் கம்பிகளை வெட்ட முயன்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், உயிரிழந்த நபர் தொடர்பான அடையாளம் மற்றும் மேலதிக விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







