நாட்டில் தற்போதைக்குப் பெய்துவரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயாவில் நீர் மட்டம் கடுமையாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளது.
நீர்மட்டம் சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போதைக்கு தெதுரு ஓயாவின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
ஒரு நிமிடத்துக்கு 16 ஆயிரத்து 500 கன அடி நீர் வான் கதவின் ஊடாக வெளியேற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்வரத்து தொடர்ந்தும் அதிகரிப்பதன் காரணமாக வான் கதவின் ஊடாக வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்தும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதன் காரணமாக தெதுரு ஓயா ஆற்றோரமாக உள்ள வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபெய்கனே, பல்லம, பிங்கிரிய, சிலாபம், ஆரச்சிகட்டுவ, ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேற்குறித்த பிரதேசங்களில் பொதுமக்கள் அவதானமாக இருந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.







