பொல்கஹவெல பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் தினேஷ் விஜேசிங்க, 20 வயதுடைய இளம் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நடத்திவரும் பிஸ்கட் உற்பத்தி நிறுவனத்தின் விநியோக நிலையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவரே இந்த முறைப்பாட்டை பொலிஸில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து, சந்தேக நபரை எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








