தென்கிழக்கு (Southeast) மற்றும் கிழக்கு-மத்திய (Eastcentral) வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக நேற்றைய தினம் (22.10.2026) காணப்பட்ட மேலடுக்கு காற்று சுழற்சியின் (Upper-air Cyclonic Circulation) தாக்கத்தினால் கிழக்கு-மத்திய மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இன்று (23.10.2026) ஒரு தாழமுக்க பகுதி (Low Pressure area) உருவாகி உள்ளது.
இது அதே பிராந்தியத்தில் தொடர்ந்து நீடித்து, நாளைய தினம் (24.10.2026) ஒரு தாழமுக்கமாக (Depression) தீவிரமடையும்.
அதன்பின்னர் இந்த தாழமுக்கமானது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 25ஆம் திகதி ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) மேலும் வலுவடையும்.
அதன்பின்னர் இந்த ஆழ்ந்த தாழமுக்கமானது மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக எதிர்வரும் 26ஆம் திகதி காலை ஒரு சூறாவளியாக (Cyclonic Storm) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஆழ்ந்த தாழமுக்கமானது சூறாவளியாக வலுவடையும் பொழுது இதற்கு இந்திய நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட “முரசு” (Murasu) என இதற்கு பெயர் (RSMC-New Delhi (Regional Specialized Meteorological Centre) இனால் வழங்கப்படும்.
பின்னர் இந்த சூறாவளியானது தொடர்ந்து வலுவடைந்து, அதனை அடுத்து வரும் 02 நாட்களில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திர பிரதேசம் (North Andhra Presesh) மற்றும் அததனை சூழவுள்ள தெற்கு ஒடிசா (South Odisha) மாநிலத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
க.சூரியகுமாரன்,
ஓய்வு பெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி.








