Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

52 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில், ‘பெரும் புதைகுழி’ என்ற சொற்றொடர் திட்டமிட்டு நீக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிமன்றில் நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் குறித்த சொற்றொடர் இடம்பெறாமை தொடர்பில் சட்டத்தரணிகள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். முன்னதாக அவர் சமர்ப்பித்த அறிக்கைகளில் அந்தச் சொற்றொடர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், தற்போதைய அறிக்கையில் அது விடுபட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், செம்மணியில் மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ள பகுதியை வழக்கமான அடக்க இடமாகக் கருதுவதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளனவா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்காக, குறித்த பகுதியின் மயானப் பதிவுகள், நிலப் பயன்பாட்டின் வரலாறு, தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் மற்றும் நம்பகமான சான்றுகள் ஆகியவற்றை ஆராய வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ள ஆழம், அவற்றின் பரவல், மண் அடுக்குகளில் அவை அமைந்துள்ள விதம் மற்றும் அவற்றின் நிலை போன்ற அம்சங்கள் தடயவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவியல் அவதானிப்புகள் வழக்கமான அடக்கம் என்ற விளக்கத்துடன் பொருந்துகின்றனவா என்பதையும், அறிக்கையின் முடிவுகளுக்கு வருவதற்குப் பயன்படுத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஒப்பீட்டுச் சான்றுகள் எவை என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என சட்டத்தரணிகள் தமது நகர்த்தல் பத்திரத்தில் கோரியுள்ளனர்.

இந்நிலையில், செம்மணி புதைகுழி தொடர்பான அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் மற்றும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!
செய்திகள்

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!

October 23, 2026
பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்
உலக செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்

October 23, 2026
தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது; லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்!
செய்திகள்

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது; லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்!

October 23, 2026
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம்; முரசு சூறாவளி குறித்த தகவல்
செய்திகள்

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம்; முரசு சூறாவளி குறித்த தகவல்

October 23, 2026
மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்
உலக செய்திகள்

மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்

October 23, 2026
சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!
உலக செய்திகள்

சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!

October 23, 2026
Next Post
பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு