மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் சீன ஆதரவாளர் எனக் கருதப்படும் முகமட் முய்சு வெற்றி
பெற்றுள்ளார். இந்தத்தேர்தலில் இந்திய ஆதரவு வேட்பாளர் எனக் கருதப்பட்ட ஜனாதிபதி இப்ராஹிம் சோலிதோல்வியடைந்துள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க 2 இலட்சத்து 82 ஆயிரம் பேர் தகுதி பெற்றிருந்தனர்.இரண்டாவது சுற்று போட்டியில் அவர் 45 வயதான முய்சு வெற்றியை தனதாக்கினார். முகமட் முய்சுக்கு 53.9 வீத வாக்குகளும் சோலிக்கு 46 வீத வாக்குகளும் கிடைத்தன.
வெற்றி பெற்ற முகமட் முய்சு எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்பார்.