Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருமான அமரர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியை நிகழ்வு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருமான அமரர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியை நிகழ்வு!

19 minutes ago
in மட்டு செய்திகள்

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இன்று (16) வல்வெட்டித்துறையில் நடைபெற்றுள்ளன.

அன்னாரின் இல்லத்தில் இன்று காலை இறுதிக்கிரியைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் வல்வெட்டித்துறை சந்தியில் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதன்போது அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

பின்னர், அன்னாரின் பூதவுடல் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

69 வயதான எம்.கே. சிவாஜிலிங்கம் கடந்த நவம்பர் 14ஆம் திகதி நீண்டகால உடல்நலக் குறைவினால் காலமானார்.

2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட அவர், வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அவரது மறைவு தமிழ் தேசிய அரசியல் வட்டாரத்திலும், அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும் தமது இரங்கலை வௌியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் இராணுவ ரக்கவண்டி மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் இராணுவ ரக்கவண்டி மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு

November 15, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்

November 15, 2026
மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

November 14, 2026
களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

November 14, 2026
மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் 09 நாட்களின் பின்னர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் 09 நாட்களின் பின்னர் உயிரிழப்பு!

November 14, 2026
களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செய்திகள்

களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

November 14, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு