Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் 09 நாட்களின் பின்னர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் 09 நாட்களின் பின்னர் உயிரிழப்பு!

14 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த 59 வயதுடைய பெண் ஒருவர், ஒன்பது நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் 35ஆம் கிராமமான கண்ணபுரம் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த காத்திகேசு இராசலெட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 05.11.2026ஆம் திகதி மாலை சுமார் 5.30 மணியளவில், குறித்த பெண் தனது கணவருடன் மாடுகளைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியுள்ளது.

இதன்போது, குறித்த பெண்ணைத் தாக்கிய யானை அவரைப் பற்றைக்காட்டுக்குள் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளது.

யானையிடமிருந்து தப்பிய கணவர், பின்னர் மனைவியைத் தேடிச் சென்றபோது பற்றைக்காட்டுக்குள் இருந்து அவரது சத்தத்தைக் கேட்டுள்ளார்.

இதனையடுத்து, கிராம மக்களின் உதவியுடன் அவர் உடனடியாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், ஒன்பது நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (13) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலால் பொதுமக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் யானைகளின் தாக்குதல்களால் உயிரிழப்புகளும் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டு வருகின்ற போதிலும், இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியும் காலதாமதம் செய்யாமல் யானைகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள கிராமப் பகுதிகளில் நிரந்தர யானை வேலிகளை அமைத்து, பொதுமக்களின் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செய்திகள்

களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

November 14, 2026
வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலி
செய்திகள்

வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலி

November 14, 2026
அமெரிக்காவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
செய்திகள்

அமெரிக்காவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

November 14, 2026
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

November 14, 2026
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு 84 புதிய வாகனங்கள் கையளிப்பு!
செய்திகள்

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு 84 புதிய வாகனங்கள் கையளிப்பு!

November 13, 2026
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிரடியாக அதிகரிப்பு; புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுல்!
செய்திகள்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிரடியாக அதிகரிப்பு; புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுல்!

November 13, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு