Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

20 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சித்குமார், விளக்கமறியலில் இருந்து பிணையில் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நேற்று (13) அனுமதி வழங்கியுள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் களஞ்சிய அறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிக் கையாடல் சம்பவம் தொடர்பில் முன்னாள் நீதிபதி ரஞ்சித்குமார் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதனையடுத்து, களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தில் பிணை கோரி அவர் விண்ணப்பித்திருந்த போதிலும், குறித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், முன்னாள் நீதிபதி ரஞ்சித்குமாரை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.

முன்னாள் நீதிபதி சார்பில் சட்டத்தரணி ஜெகனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சிரேஷ்ட சட்டத்தரணி பே. பிரேம்நாத் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் களஞ்சிய அறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையாடல் சம்பவம் தொடர்பில் பொதுச் சொத்துகள் மீதான குற்றங்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் முன்னாள் நீதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நானுஓயாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் காயம்!
செய்திகள்

நானுஓயாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் காயம்!

November 14, 2026
நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!
செய்திகள்

நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!

November 14, 2026
மாதவனையில் இரண்டு பசுக்கள் சுட்டுக்கொலை; பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம்!
செய்திகள்

மாதவனையில் இரண்டு பசுக்கள் சுட்டுக்கொலை; பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம்!

November 14, 2026
மக்கள் மீதான அழுத்தங்கள் வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை; லஹிரு வீரசேகர எச்சரிக்கை!
செய்திகள்

மக்கள் மீதான அழுத்தங்கள் வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை; லஹிரு வீரசேகர எச்சரிக்கை!

November 14, 2026
மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் 09 நாட்களின் பின்னர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் 09 நாட்களின் பின்னர் உயிரிழப்பு!

November 14, 2026
களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செய்திகள்

களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

November 14, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு