Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

16 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நேற்று (13) வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விசேட டெங்கு கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி தெற்கு, களுவாஞ்சிகுடி வடக்கு மற்றும் பட்டிருப்பு ஆகிய பகுதிகளை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் இந்த விசேட சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

இதில் பொலிஸார், கடற்படையினர், இலங்கை செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், டெங்கு கள உதவியாளர்கள் மற்றும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து கொண்டனர்.

இதன்போது, பொதுமக்களின் வீடுகள், தனியார் கல்வி நிலையங்கள், அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, ஒரே நாளில் மொத்தம் 467 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்டமை மற்றும் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்தமை தொடர்பில் 08 பேருக்கு எதிராக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறும், நீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்றுவதுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலி
செய்திகள்

வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலி

November 14, 2026
அமெரிக்காவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
செய்திகள்

அமெரிக்காவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

November 14, 2026
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

November 14, 2026
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு 84 புதிய வாகனங்கள் கையளிப்பு!
செய்திகள்

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு 84 புதிய வாகனங்கள் கையளிப்பு!

November 13, 2026
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிரடியாக அதிகரிப்பு; புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுல்!
செய்திகள்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிரடியாக அதிகரிப்பு; புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுல்!

November 13, 2026
நீதிவானுக்கு எதிரான கருத்து; கஸ்ஸப தேரருக்கு எதிராக திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!
செய்திகள்

நீதிவானுக்கு எதிரான கருத்து; கஸ்ஸப தேரருக்கு எதிராக திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!

November 13, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு