Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

14 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 104 தற்கொலை மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்ட 66 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மாவட்டத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு செல்வநாயகம் வீதியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி குணசேகரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி புதுக்குடியிருப்புப் பகுதியில் காணி தொடர்பாக உயிரிழந்த முதியவருக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து, பொலிஸாரால் குறித்த முதியவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர்கள், நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (12) திறந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கின் தீர்ப்புத் திகதியை நீதவான் அறிவித்ததைத் தொடர்ந்து, குறித்த முதியவர் நீதிமன்றத்தில் எழுந்து நின்று தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் தற்கொலை செய்துகொள்வதாகவும் சத்தமிட்டுள்ளார்.

இதனையடுத்து, நீதிமன்றப் பொலிஸார் அவரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (13) அதிகாலை சுமார் 5 மணியளவில் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகிலுள்ள வீதியில் முதியவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனைக் கண்டவர்கள் உடனடியாகப் பொலிஸாருக்கும் 1990 அவசர அம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சிகிச்சைப் பிரிவினர் தீயைக் கட்டுப்படுத்தி, படுகாயமடைந்த முதியவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

எனினும், சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை சுமார் 11 மணியளவில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலை மரணங்கள்

இதேவேளை, மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை மொத்தம் 104 தற்கொலை மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதில் நவம்பர் மாதத்தில் மாத்திரம் ஐந்து பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தில் பதிவாகும் இத்தகைய மரணங்கள் தொடர்பில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வையும் உளவியல் ஆதரவு சேவைகளையும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!
செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!

November 14, 2026
களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

November 14, 2026
நானுஓயாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் காயம்!
செய்திகள்

நானுஓயாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் காயம்!

November 14, 2026
நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!
செய்திகள்

நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!

November 14, 2026
மாதவனையில் இரண்டு பசுக்கள் சுட்டுக்கொலை; பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம்!
செய்திகள்

மாதவனையில் இரண்டு பசுக்கள் சுட்டுக்கொலை; பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம்!

November 14, 2026
மக்கள் மீதான அழுத்தங்கள் வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை; லஹிரு வீரசேகர எச்சரிக்கை!
செய்திகள்

மக்கள் மீதான அழுத்தங்கள் வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை; லஹிரு வீரசேகர எச்சரிக்கை!

November 14, 2026
Next Post
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.