பாராளுமன்றம் இன்று (03) காலை 10.30க்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் என்பன இன்று(03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் உத்தரவிற்கமைய திருத்தங்களுக்கு உட்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இதனிடையே, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தினூடாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய ஆணைக்குழுவினால் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து இணையத் தொடர்பாடல்களையும் கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இந்த சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவிற்கமைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இந்த 2 சட்டமூலங்களும் இன்று(03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக தமது அதிருப்திகளை வௌியிட்டு வருகின்றனர்.