Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஜனியை சந்தித்த தமிழ் எம்.பி; சார்லஸ் நிர்மலநாதனுக்கு அனுமதி மறுப்பு!

ரஜனியை சந்தித்த தமிழ் எம்.பி; சார்லஸ் நிர்மலநாதனுக்கு அனுமதி மறுப்பு!

3 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

அண்மையில் தமிழகம் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் நடிகர் ரஜனிகாந்தை சந்தித்திருந்தார். அதேசமயம் சார்லஸ் நிர்மலநாதனும் தமிழகம் சென்ற நிலையில், அங்குள்ள ஈழ ஏதிலிகளை சந்திக்க அனுமதி அவருக்கு மறுக்கப்பட்டிருந்தது.

மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை கடந்த வியாழக்கிழமை(26.09.2023) அன்று சந்திக்க சென்றிருந்த போதே அங்குள்ள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அகதிகளை சந்திப்பதற்கான வேண்டுகோள் தாயகத்தில் இருந்து விடுக்கப்பட்ட நிலையில் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அங்குள்ள நடைமுறைகளை பின்பற்றி சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்திய விடயமானது, ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியையும், விசனத்தையும் உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் தோழர் பாலன் இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,

இருவரும் ஈழத் தமிழர்கள், இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் விக்கினேஸ்வரன். இன்னொருவர் சார்லஸ் நிர்மலநாதன் ஒருவர் தமிழ்நாடு சென்று நடிகர் ரஜனியை சந்தித்தார்.

இன்னொருவர் தமிழ்நாடு சென்று ஈழத் தமிழ் அகதிகளை சந்திக்க முயன்றார். ஒருவருக்கு நடிகர் ரஜனியை சந்திக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு, இன்னொருவருக்கு அகதிகளை சந்திக்க அனுமதி மறுத்துள்ளது.

இங்கு விக்கினேஸ்வரன் ஏன் அகதிகளை சந்திக்கவில்லை என்று நான் கேள்வி கேட்கப்போவதில்லை. மாறாக, சார்லஸ் நிர்மலநாதனுக்கு அகதிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு ஒரு கண்டனத்தை கூட ஏன் அவர் தெரிவிக்கவில்லை?

தமிழக முதல்வரிடம் சிங்கள மக்களுக்கும் அரிசி அனுப்புமாறு கேட்ட சுமந்திரன் கூட அகதிகளை சந்திக்க அனுமதி மறுப்பது தவறு என்று ஏன் அந்த தமிழக முதல்வரிடம் கூற முடியவில்லை? எல்லாவற்றுக்கும் மேலாக, “ஈழத் தமிழர் அனாதைகள் இல்லை. அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம்” என்று கூறிவரும் தமிழக முதல்வர் ஸடாலின் அகதிகளை சந்திக்க அனுமதி மறுப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!
செய்திகள்

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

July 22, 2026
இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!
செய்திகள்

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

July 22, 2026
‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

July 22, 2026
தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
Next Post
வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு