Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது ‘Canal-Top Solar’ சூரிய மின்சக்தி திட்டத்திற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் வியானா கால்வாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளமுடைய இந்தக் கால்வாய், தேசிய மின்கட்டமைப்புக்கு அதிகளவிலான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திறனும், ஆண்டின் பெரும்பகுதியில் போதுமான சூரிய ஒளி கிடைப்பதும் கருத்தில் கொண்டு திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்வாயின் மீது சூரிய மின்தகடுகள் பொருத்தப்படுவதன் மூலம் நீர் ஆவியாவதைக் குறைத்தல், நீரின் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் பேணுதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட எதிர்கால ஆற்றல் திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தல் ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

மேலும், திட்டத்தின் கீழ் பாதுகாப்பு மின்சார யானை வேலியும் அமைக்கப்படவுள்ளதால், வனப்பகுதிகளில் இருந்து வரும் யானைகள் கால்வாயில் விழுந்து உயிரிழக்கும் அபாயத்தையும் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தேசிய அளவிலான முன்னோடி அபிவிருத்தித் திட்டமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கள விஜயமும் மறுஆய்வுக் கலந்துரையாடலும் நேற்று முன்தினம் (20) மஹியங்கனையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர பண்டார, சுதத் பலகல்ல மற்றும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் அலககோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி
செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

July 22, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!
செய்திகள்

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

July 22, 2026
‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

July 22, 2026
தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
Next Post
புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு