கேகாலை பிரதேசத்தில் பாலர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் சிறுமிகளின் காதணிகள் மற்றும் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் அப்பாலர் பாடசாலையின் ஆசிரியைகள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலர் பாடசாலையின் சிறுமிகளின் நகைகள் தொடர்ச்சியாக காணாமல் போவதற்கு இச்சிறுமிகளின் அலட்சியத்தன்மையே காரணம் என இவர்களின் பெற்றோர்கள் நம்பி வந்துள்ளனர்.
எனினும், அண்மித்த சில சம்பவங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியமையால் இவ்விடயம் தொடர்பில் பாலர் பாடசாலையின் பொறுப்பாளரிடம் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து பெற்றோரும் பொறுப்பாளரும் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து ஆசிரியைகளை விசாரணை செய்த போது உண்மை அம்பலத்துக்கு வந்துள்ளது.
அதன் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் ஏப்ரல் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.