நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்று (06) காலை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
சுற்றாடல் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நசீர் அஹமட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக அமைச்சர் நசீர் அஹமட் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததுடன் அவரும் 20வது திருத்தத்திற்கு ஆதரவளித்த பட்டியலில் ஒருவர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு அதுவே முக்கிய காரணம் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அன்று தெரிவித்திருந்தார்.