Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அகதிகள் தொடர்பில் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம்; சுமந்திரன்

அகதிகள் தொடர்பில் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம்; சுமந்திரன்

1 year ago
in செய்திகள்

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்கீழ் மீள நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படவோ, தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள் எனவும் மாறாக கொள்கை ரீதியான மாற்றமே அவசியம் என தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் X தள பதிவை மேற்கோள்காட்டி சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது, குறித்த நபருக்கான பயண அனுமதிப்பத்திரம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்டிருப்பதுடன், அது இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் அவரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

அவ்வாறிருக்கையில் அந்நபரைக் கைதுசெய்த குடிவரவுத்திணைக்கள அதிகாரிகள், இதுபற்றி ஏன் ஆராயவில்லை.

மாறாக அவரைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தது ஏன்?’ என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (01) தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வைத்துள்ள அவர், “அகதிகள் தொடர்பான கொள்கையை மாற்றியமைப்பதாக அரசாங்கம் கூறியிருப்பதைப் பெரிதும் வரவேற்பதாகவும், இருப்பினும் இதுகுறித்த சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் ‘தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்’ கீழ் நாடு திரும்பும் நபர்கள் கைதுசெய்யப்படவோ அல்லது தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள்.

மாறாக அவர்கள் நாட்டுக்குள் வரவேற்கப்படுவார்கள் எனும் கொள்கைசார் அறிவுறுத்தல் மாத்திரமே அவசியமாக இருக்கின்றது’ என்றும் சுமந்திரன் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
Next Post
மனைவியின் கழுத்தை அறுத்து தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்; வவுனியாவில் சம்பவம்

மனைவியின் கழுத்தை அறுத்து தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்; வவுனியாவில் சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு