அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது, இன்று அதிகாலை 3.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் எந்தவிதமான சேதங்களும் இதுவரையில் பதிவாகவில்லை.
6 ரிக்டர் அளவுக்கும் குறைவான அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதால் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.