Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வேகமாக இடம்பெறுகிறது; இந்திய நிதியமைச்சர் தெரிவிப்பு!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வேகமாக இடம்பெறுகிறது; இந்திய நிதியமைச்சர் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஏனைய நாடுகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிக வேகமாக நடைபெற்று வருவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டை முன்னிட்டு மொரோக்கோவின் மராகேஷில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த இந்திய நிதியமைச்சர்,

“இலங்கை சிரமங்களை எதிர்கொண்ட போது, ​​அது ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தது. ஆனால் கொவிட் தாக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட ஸ்திரமின்மை காரணமாக அந்த நிலை வீழ்ச்சியடைந்தது. இலங்கை குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாறியது. இலங்கை எதிர்கொண்ட நெருக்கடி காரணமாக, நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்த இது, ஒரு பொதுவான கட்டமைப்பிற்குள் தீர்க்க முடியாத ஒரு சூழ்நிலையாகும். அதனால்தான் இந்த நெருக்கடியை பொதுவான கட்டமைப்பில் எதிர்கொள்ள அது தகுதி பெறவில்லை.”

“பலருடன் ஒப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கை பெறும் தீர்வுகள் மிகவும் நல்லவை மற்றும் மிக விரைவானவை என்று நான் நினைக்கிறேன். மற்றவர்களுக்கு எதிரான பொதுவான கட்டமைப்பை நான் மதிப்பிடவில்லை. ஆனால் பொதுவாக இன்று IMF மற்றும் பல நிறுவனங்களில், செயல்முறை வேகமாக இருக்க வேண்டும்.இலங்கையில் முன்மொழிவுகள் வேகமாக நடப்பதாக கூறப்படுகிறது.

“சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன், இறையாண்மைக் கடன் தொடர்பான கடன் வழங்குநர் குழுக்களை நிறுவும் போது இலங்கையின் கடன் நெருக்கடி பிரச்சினை பற்றி நாங்கள் விவாதித்தோம். அந்த நிலைமை எதிர்காலத்தில் எந்த நாட்டிற்கும் பயன்படும் வகையில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். அந்த முறைமை ஊடாக மிக துரிதமாக தீர்வுகளை வழங்கி செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.” என்றார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கட்டமைப்பிற்குள் கடன் தீர்வுகள் தொடர்பில் கொள்கையளவில் உடன்பாட்டை எட்டுவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாக இலங்கையின் தனியார் கடன் வழங்குநர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் சர்வதேச பத்திரக் கடன் தொடர்பான இலங்கையின் கடன் சவால்களுக்கு நிலையான தீர்வைக் காண்பதற்கு, துரிதமாக செயற்படுவதற்கு தாங்கள் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு
செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு

June 25, 2026
நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது
செய்திகள்

நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது

June 25, 2026
சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு
செய்திகள்

சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

June 25, 2026
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்
செய்திகள்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

June 25, 2026
வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
Next Post
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நவம்பர் முதல் இழப்பீடு; அமைச்சர் மஹிந்த அமரவீர!

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நவம்பர் முதல் இழப்பீடு; அமைச்சர் மஹிந்த அமரவீர!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு