Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்!

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்!

3 years ago
in செய்திகள்

இன்று ஆரம்பமாகும் நவராத்திரியில் முதல் மூன்று நாள்களும் துர்க்கையையும், அடுத்த மூன்று நாள்களும் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியையும் நினைத்து வழிபடுவது வழக்கம். நவராத்திரி, இந்தியாவின் வட மாநிலங்களில் துர்கா பூஜையாக வழிபடப்படுவதால் இந்த ஒன்பது நாள்களும் அங்கு நவதுர்க்கை பூஜை செய்வதும் வழக்கமாக உள்ளது. அன்னை பல்வேறு ரூபங்களில் பக்தர்களுக்கு அருள் புரியும் அற்புதமான காலம் இதுவாகும்.

அம்பிகை, அசுரனை வதம் செய்வதற்காக தவம் செய்த காலம் நவராத்திரி ஆகும். மகாளய அமாவாசைக்கு அடுத்தநாளான பிரதமையில் நவராத்திரி வழிபாட்டைத் தொடங்க வேண்டும். இந்த ஆண்டு நவராத்திரி இன்று தொடங்கி 23ஆம் திகதி வரைக் கொண்டாடப்படுகிறது.

வழக்கமாக மகாளய அமாவாசை நாளிலிலேயே நவராத்திரி கொலுஅமைப்பதற்கான வேலைகளைத்
தொடங்கி விடுவார்கள். கொலு படிகள் அடிக்கு, நல்ல நேரத்தில் இரண்டு பொம்மைகளையாவது எடுத்து வைத்து விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் சேர்ந்தேவருகிறது.

நவராத்திரி கொலு அமைக்கும் நேரம்

இந்துக்களின் வழிபாட்டு முறைகளின் படி கிரகணம் என்பது சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற காலம் இல்லை என கருதப்படுகிறது. கிரகணத்தின் போது கோவில்கள் அடைக்கப்பட்டு விடும். கிரகண நேரம் நிறைவடைந்த பிறகு கோவில் முழுவதும் சுத்தம் செய்து, தெய்வத்திற்கு அபிஷேகம், சாந்தி மற்றும் பரிகார பூஜைகள் செய்த பிறகே மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு சூரிய கிரகணம் நேற்று இரவிலேயே நிகழ்ந்தது.அதனால் நேற்று மகாளய அமாவாசை அன்று கொலு அடுக்கி வைத்தால் மறுநாள் இன்று காலை வீடு முழுவதையும், பூஜை பொருரகள் அனைத்தையும் சுத்தம் செய்த பிறகே நவராத்திரி பூஜையைத் தொடங்க வேண்டும். இது அனைவருக்கும் சிரமம் என்பதால் இன்று காலையில் கொலு அமைப்பதே சிறப்பானதாகும். நேற்றே கொலுவிற்கான பொம்மைகள், கொலு படிகளைதுடைத்து சுத்தம் செய்து வைத்திருந்தால் இன்று காலை வீட்டைச் சுத்தம் செய்து கொலுப் படிகள் அடுக்குவதற்கு எளிதாக இருக்கும்.

இன்று காலை 06.05 மணி முதல் 11.45 மணி வரையிலான நேரத்திற்குள் கொலு படிகள் அடுக்கி, ஏதாவது ஒரு
நைவேத்தியம் படைத்து, நவராத்திரி பூஜையை தொடங்கி விட வேண்டும்.மாலை 6 மணிக்கு மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். ராகு காலம், எமகண்டம் தவிர்த்து பூஜை செய்ய வேண்டும். காலை பூஜையை 9 அல்லது 10 மணிக்கு நிறைவு செய்து விட வேண்டும். மாலை பூஜையை 6 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

முதல் நாள் வழிபாடு

நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் அம்பிகையைத் துர்க்கையாக வழிபட வேண்டும். துர்க்கை என்றாலே துக்கங்களை நீக்கி, நமக்கு அரணாக இருந்து காக்க கூடியவள் என்று அர்த்தம். அனைத்திலும் வெற்றியை தரக் கூடியவள் என்பதாலும், அம்பிகை தவம் செய்ய தொடங்கிய காலம் என்பதால் இந்த நாளில் நாமும் அவளை மனதார நினைத்து வழிபடலாம். நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை உமா மகேஸ்வரியாக அலங்கரித்து வழிபட வேண்டும். நவ துர்க்கைகளில் முதல் தேவியான சைலபுத்திரியாகவும் வழிபட வேண்டும். அரிசி மாவினால் பொட்டு வகை கோலம் அமைத்து, மலர்களில் மல்லிகையும், இலைகளில் வில்வமும் கொண்டு அம்பிகையை அர்ச்சித்து வழிபட வேண்டும். நைவேத்தியமாக வெண் பொங்கல் அல்லது சுண்டல் படைத்து வழிபட வேண்டும். பாட வேண்டிய ராகம் தோடி. இந்த நாளில் அம்மனுக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி அலங்கரிக்க வேண்டும். நாமும் பச்சை நிற உடை உடுத்து பூஜை செய்ய வேண்டும்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.