Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேராதனை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதல் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டது; சபையில் சஜித்!

பேராதனை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதல் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டது; சபையில் சஜித்!

3 years ago
in செய்திகள்

பேராதனை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதல் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (20) பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர்கல்விக்கு ஏற்பட்டுள்ள மரண அடி தொடர்பில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் பல கருத்துக்களை முன்வைத்தேன். மாணவர்களால் 3 வேளையும் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,

பொதுவாக பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல்வாதிகளை சந்திப்பதில்லை என்றாலும், தன்னைச் சந்தித்து தமது குறைபாடுகளை முன்வைத்தனர்.

இவ்வாறு ஆயிரமாயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியில் அவர்கள் தமது உரிமைகளுக்காக போராட்டம் நடத்தும் போது, பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இதற்கு மிக அண்மைய உதாரணம் பேராதனைப் பல்கலைக்கழக ஆர்ப்பாட்டம்.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு மிலேச்சத்தனமான தாக்குதல் விடுக்கப்படுவதாகவும், இங்கு காயங்களுக்கு உள்ளானால் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளை தயார்படுத்துமாறு நுகேகொட பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்,

ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது உரிமைக்காக குரல் எழுப்பும் பேச்சு சுதந்திரம் உள்ள நாட்டில் இவ்வாறான அடக்குமுறை நடவடிக்கைகளை அங்கீகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
கோட்டாவையும்- பிள்ளையானையும் தூக்கிலிடவேண்டும்; ஜனாதிபதியிடம் சஜித் வலியுறுத்து!

பிள்ளையானே எங்களுக்கு தகவல்களை வழங்கினார்; முன்னாள் புலனாய்வு அதிகாரி தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு