எந்தவொரு பிரச்னைக்கும் யுத்தம் ஒரு தீர்வு அல்ல எனவும் பிரச்னையின் மூலக்காரணம் கண்டறியப்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பேரவை அனைத்தும் பல் அற்ற பாம்புகளாகவே காணப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் – காஸா மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபையினை உடனடியாக தலையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் ஒத்தி வைப்புவேளை விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தின் போது கருத்துரைக் கையிலே பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்
காஸாவில் உள்ள வைத்தியசாலை மீது அண்மையில் தாக்குதல் நடத்தப் பட்டது. அதேபோன்று பாடசாலை, குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நிலைமையே இலங்கை யிலும் காணப்பட்டது.
வடக்கு கிழக்கில் மக்கள் குடியிருப்புகள், பாடசாலைகள், வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதே போன்றுதான் காசாவில் நடக்கிறது.இன்றைய நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பேரவை அனைத்தும் பல் அற்ற பாம்புகளாகவே காணப்படுகின்றன. அவர்களுக்கு எந்த வொரு அதிகாரமும் கிடையாது. இவ்வாறானதொரு நிலையே இலங்கையிலும் காணப்பட்டது.
இலங்கையில் நடந்த யுத்தம் சாட்சிய மற்ற நிலையில் காணப்பட்டது. காசாவில் நடைபெறும் யுத்தத்தை காணும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளினால் இலங்கையில் நடத்த யுத்தத்தினை காண முடியவில்லை. சர்வதேச சமூகத்தைப் பொறுத்த வரையில் நியாயம், நீதி, நேர்மை என்று எந்தவொரு விடயமும் கிடையாது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச நாடாக இருந்தாலும் தேசிய நலன் மாத்திரமே நியாயம் நீதியாக காணப்படுகிறது.
இலங்கை யுத்தத்தின் பின்னர் 40,000 பேர் கொல்லப்பட்டதாக உள்ளக அறிக்கையின் மூலம் ஐக்கிய நாடுகள் அறிந்து கொண்டதாக சொல்லப்பட்ட போதும், 100,000 பேர் கொல்லப்பட்டதாக தமிழ் தரப்பினால் முன்வைக்கப்பட்டது.இதன்முலம் ஐ.நா. பாடம் கற்றுக் கொண்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ஐ.நா. எந்தவொரு பாடத்தி னையும் கற்றுக்கொள்ளவில்லை. அவ் வாறு இருந்தால் காசாவில் இன்று இவ்வாறு நடக்கவாய்ப்பில்லை.ஆகவே, சர்வதேச சமூகமல்ல நாட்டினுள் வாழும் நாம் பாடத்தினை கற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச சமூகம் எம்மை ஒருபோதும் காப்பாற்றாது.
எம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டிற்கு வரவேண்டும். பலஸ்தீனத்தின் இருப்பை இஸ்ரேல் அங்கீகரிப்பது போன்று இஸ்ரேலின் இருப்பையும் பலஸ்தீனம் அங்கீகரிக்க வேண்டும். இதுதான் நியாயமான தீர்வு என சொல்லப்படுகிறது.அதேபோன்று இலங்கையில் இன்று தனிநாட்டு கோரிக்கை இல்லாத போதிலும், ஒரேநாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழவேண்டுமானால், மீண்டும் ஒரு யுத்தம் நிகழாமல் இருக்க வேண்டுமானால் பலஸ்தீனத் திற்கு ஒரு நியாயமும் இலங்கைக்கு வேறு வொரு நியாயமும் இருக்க முடியாது.
இந்த விடயத்தினை புரிந்துகொண்டு இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சியை வழங்கி
அங்கீகரிக்க வேண்டும்என்றார்.