கார் விபத்தில் பொலிஸ் சார் ஜன்ட் உயிரிழந்த வழக்கில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை,
நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சிறீரங்காவை எதிர்வரும் மே 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.கடந்த 17ஆம் திகதி, வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து கொழும்பு தெற்கு போதனா மருத்துமவனையில் வைத்து பொலிஸாரால் சிறீரங்கா கைது செய்யப்பட்டார்.
2011 மார்ச் 30 ஆம் திகதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா மதவாச்சியிலிருந்து செட்டிக்குளம் பகுதிக்கு பயணித்த வாகனம், செட்டிக்குளம் மருத்துவமனைக்கு முன்பாக, விபத்துக்கு உள்ளானதில் அவரு
டன் பயணித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சார்ஜன்ட் (36759) ஜி. உதய ஜெயமினி புஷ்பகுமார உயிரிழந்தார். உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே காரை செலுத்தி சென்றார் என்று தெரிவிக்கப்பட்டு, விசாரணை முடிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விபத்து தொடர்பில் உயிரிழந்த சார்ஜன்ட்டின் மனைவி செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் விசேட புலனாய் வுப் பிரிவின் அதிகாரிகள் நடத் திய விசாரணையில், அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சிறீ ரங்காவே வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தி யமை தெரியவந்துள்ளது.இது தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்ட பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். விசாரணையில் சாட்சியமளித்த இருவருக்கு தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுத்தது தொடர்பிலான விசாரணை அறிக்கை மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
தகவல்களை மறைத்த குற்றச் சாட்டின் பேரில் முன்னாள் செட்டிக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுகத் ரொஷான் சஞ்சீவ நீதிமன்றில் முன்னிலையாகி குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.