Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

3 years ago
in செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மத்திய நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (23) பிற்பகல் 02.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய-மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வங்கதேச கடற்கரையை (இலங்கையை விட்டு) நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய கடல்கள் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கும், மேலும் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி படகுகள் அவதானம் இதன் காரணமாக தென்மேற்கு மற்றும் அதனை அண்டிய மேற்கு வளைகுடா பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
சமூகவலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும்; பிரான்ஸ் உள்துறை அமைச்சர்!

சமூகவலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும்; பிரான்ஸ் உள்துறை அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு