Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் மற்றும் வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர்கள் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர்.

வவுணதீவு பகுதியில் அதிகரித்து வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு பிரதேசசபையின் பிரதி தவிசாளர் த. டிசாந்த் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்களும், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரும் இணைந்து கரையாக்கன்தீவு வாவிக்கரையோரப் பகுதியில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சுற்றிவளைப்பின் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் மூவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கோடா உள்ளிட்ட மூலப்பொருட்கள், உற்பத்தி உபகரணங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட கசிப்பு போத்தல்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் வவுணதீவு பொலிஸாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு