வவுனியா – நெடுங்கேணி – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் பெயர்த்தும் – உடைத்தும் அழிக்கப்பட்டமைக்கு எதிராக இன்று வியாழக்கிழமை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு
ஆரம்பமாகும் பேரணி வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்று நிறைவடையும். இந்தப்
போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், வர்த்தகர் சங்கங்கள், சமய, சமூக
அமைப்புகள் எனப் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.அத்துடன், இந்தப் பேரணியில் இன, மத பேதமின்றி அனைத்து மக்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறும் ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்த வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து சிவலிங்கம் பெயர்க்கப்பட்டு உடைத்து எறியப்பட்டதுடன் அங்கி ருந்த விநாயகர், அம்மன் சிலைகள் பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. அத்துடன், அங்கு வழிபடப்பட்டு வந்த சு+லங்களும் பிடுங்கப்பட்டு வீசி எறியப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.