லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திற்கான (LIOC) உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள இலங்கை அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, லங்கா ஐஓசியின் இலங்கையிலுள்ள உள்ளூர் விநியோக நிறுவனங்கள், இலங்கையில் அவர்களின் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை மேலும் 20 ஆண்டுகளுக்கு தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் உரிமமானது அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான தீபக் தாஸ், கொழும்பிலுள்ள பங்குச் சந்தையின் தலைமை ஒழுங்குமுறை அதிகாரிக்கு எழுதிய கடிதத்திலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.








