Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக விசேட விசாரணை; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்!

அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக விசேட விசாரணை; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்!

3 years ago
in செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

மங்களராமய அம்பிட்டிய சுமண தேரர் தமிழர்களை வெட்டுவேன் என்பது உள்ளிட்ட இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர் மீது நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதத்தினை அனுப்பியுள்ளதோடு, மனோகணேசன், வேலுகுமார் உள்ளிட்டவர்களும் தேரரைக் கைது செய்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரம், மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜீவ்காந் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதோடு ஆதாரங்களையும் கையளித்து நடவடிக்கைகளை முன்னெடுக்கமாறு வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்.

இந்நிலையில், குறித்த விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

அம்பிட்டிய சுமண தேரருக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

நாட்டில் சட்டம், ஒழுங்கை அமுலாக்குவதற்கும், அமைதியைப் பேணிக்காப்பதற்காகவும் உரிய நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஆகவே, முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அந்த வகையில் வீணான சந்தேகங்களை வெளியிட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல்!

அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு