சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியிருந்த இலங்கையர்களுக்கு விசா வழங்குவதில் தமக்கு உடன்பாடில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வீசா இன்றி இஸ்ரேலில் யுத்த மோதல்களுக்கு மத்தியில் இருப்பவர்கள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தகவல்களை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
இதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு விசா புதுப்பித்தல் தொடர்பாக சுமார் 2000 கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
செல்லுபடியாகும் வீசா இன்றி இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் முறைமை அமைக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் முன்னர் அறிவித்திருந்தது.