இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட சினோபெக் நிறுவனமும் எரிபொருளில் விலைத்திருத்தம் செய்துள்ளது.
இதன்படி பெட்ரோல் 92 ஆக்டேன் 02 ரூபாவால் குறைக்கப்பட்டு, 356 ரூபாவாகவும், ஆக்டன் 95 ரக பெற்றோல் 03 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 423 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆட்டோ டீசல் 08 ரூபாவல் அதிகரிக்கப்பட்டு 356 ரூபாவிற்கும், சூப்பர் டீசல் 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 431 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.