அமெரிக்கா விசா மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர ஆசியாவின் தவிர்க்க முடியாத நம்பகமான நண்பன் சீனா என அந்த நாட்டிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
பிஓஏஓ உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகளிற்கு இடையிலான பிணைப்பை நெருக்கத்தை மேற்குலகினால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிணைப்பு வர்த்தகம்மூலமும் முக்கியமாக பௌத்தம் மூலமும் வளர்ச்சியடைந்தது வளர்த்தெடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர சீனா ஆசியாவின் தவிர்க்க முடியாத நம்பகதன்மை மிக்க நண்பன் எனவும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பேரவையில் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடான சீனா இலங்கைக்கு தொடர்ச்சியாக அளித்துவரும் ஆதரவிற்கு நாங்;கள் நன்றியுடையவர்களாக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் ஈவிரக்கமற்ற அமைப்பினை நாங்கள் தோற்கடித்தவேளை மேற்குஉலக நாடுகள் எங்களை குற்றவாளிகளாக்கின ஆனால் சீனா எங்களிற்கு ஆதரவாகயிருந்தது எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.