வடமராட்சி கடற்தொழிலாளர்கள் கடற்படையின் அனுமதி பெற்றே கடற்றொழிலுக்கு செல்ல வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
சுருக்கு வலை மீன் பிடி உள்ளிட்ட சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற பேச்சின்போதே இந்த முடிவு எட்டப்பட்டது.
மேலும், கடலில் நடைபெறும் சட்ட விரோத மீன் பிடிமுறைமைகள் உள்ளிட்டவற்றை ஏன் கடற்படையினர் கட்டுப்படுத்தவில்லை ? நீரியல் வள திணைக்களமும் சட்டவிரோத கடற்றொழில் செய்வோருக்கு
எதிராக நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கடற்றொழிலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடற்படையினரின் அனுமதி பெற்று அவர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் கடற்றொழிலுக்கு செல்லும் நடைமுறை முன்னர் இருந்தது. இது தொழிலாளர்களின் சுதந்திரத்தைப்பாதித்தது. இதையடுத்தே இந்த
நடைமுறை தளர்த்தப்பட்டது.
இந்நிலையில், பலர் சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதால் மீண்டும் அந்த
நடைமுறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இந்த நடைமுறையின் சாதக, பாதகம் தொடர்பில் ஆராய்ந்து அதனை தொடர்வதா? அல்லது சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கை உண்டா என்பது தொடர்பில் ஆராயும் வரையில் கடற்படையின் அனுமதி பெற்ற தொழிலுக்கு செல்ல
வேண்டும் – என்று அமைச்சர் கூறினார்.